சென்னை
தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி 25 அடி உயர மேம்பாலத்தில் இருந்து விழுந்த வாலிபர் பலி
|தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி சுமார் 25 அடி உயர மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த வாலிபர் பலியானார்.
தடுப்பு சுவரில் மோதல்
ஆவடியை அடுத்த பட்டாபிராம் கக்கன்ஜி நகரை சேர்ந்தவர் கமலேஷ் (வயது 21). இவர், பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று காலை கமலேஷ் வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் பட்டாபிராம் - தண்டுரை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது மேம்பாலத்தின் வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக மேம்பால தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதியது.
உயிரிழந்தார்
இதில் சுமார் 25 அடி உயரமுள்ள மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட கமலேஷ், கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆவடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கமலேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.