< Back
மாநில செய்திகள்
அண்ணாநகரில் தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
சென்னை
மாநில செய்திகள்

அண்ணாநகரில் தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

தினத்தந்தி
|
20 July 2023 1:53 PM IST

அண்ணாநகரில் தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா நகர்,

சென்னை அம்பத்தூர் ஐ.சி.எப். காலனியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவருடைய மகன் வேதநாயகம் (வயது 19). இவருடைய உறவினர் மகன் வசந்த் (19). இவர்கள் இருவரும் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்துள்ளனர்.

இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு அண்ணா நகரில் உள்ள நண்பரை பார்த்துவிட்டு மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அண்ணா நகர், சாந்தி காலனி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது தண்ணீர் லாரி மோதியது. இதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது வேதநாயகத்தின் மீது தண்ணீர் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். வசந்த் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய தண்ணீர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்