< Back
மாநில செய்திகள்
மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
கடலூர்
மாநில செய்திகள்

மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு

தினத்தந்தி
|
28 Sep 2023 6:45 PM GMT

விருத்தாசலம் அருகே மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

விருத்தாசலம்

விருத்தாசலத்தை அடுத்த குப்பநத்தம் பழைய காலனியை சேர்ந்தவர் ராதாமணி மகன் சக்திவேல்(வயது 24). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் குப்பநத்தம்-புதுக்கூரைப்பேட்டை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் இருந்த வேகத்தடையில் ஏறி இறங்கியபோது நிலை தடுமாறி சக்திவேல் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்து புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்