< Back
மாநில செய்திகள்
மெரினா காமராஜர் சாலையில் பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் சாவு
சென்னை
மாநில செய்திகள்

மெரினா காமராஜர் சாலையில் பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் சாவு

தினத்தந்தி
|
16 Oct 2023 10:41 AM IST

மெரினா காமராஜர் சாலையில் பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

சென்னை ராயப்பேட்டை தேவராஜ் தெருவை சேர்ந்தவர் இம்தியாஸ் (வயது 26). நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கொரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தனது நண்பரை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் மண்ணடி சென்று கொண்டிருந்தார்.

மெரினா காமராஜர் சாலை, வி.பி.ராமன் சாலை சந்திப்பில் சென்ற போது, பின்னால் வந்த தனியார் சொகுசு பஸ் ஒன்று இம்தியாசின் இருசக்கர வாகனத்தை வேகமாக முந்திச்செல்ல முயன்றது. அப்போது, இருசக்கர வாகனத்தின் கைப்பிடி பஸ்சில் உரசியது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த இம்தியாஸ், பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கினார். பஸ் சக்கரம் இம்தியாசின் தலையில் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே இம்தியாஸ் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான பஸ்சை பறிமுதல் செய்ததுடன், டிரைவர் மற்றும் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்