< Back
மாநில செய்திகள்
வாலாஜாபாத் அருகே மின்னல் தாக்கி வாலிபர் சாவு
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

வாலாஜாபாத் அருகே மின்னல் தாக்கி வாலிபர் சாவு

தினத்தந்தி
|
1 Sept 2022 2:18 PM IST

வாலாஜாபாத் அருகே மின்னல் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகாவுக்கு உட்பட்ட ஊத்துக்காடு கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன், இவரது மகன் தினேஷ்குமார் (வயது 24). பட்டதாரி.

நேற்று மாலை வாலாஜாபாத் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வந்த நிலையில் வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த கால்நடைகளை அழைத்து வர தினேஷ் குமார் வயல்வெளிக்கு சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மின்னல் தாக்கி உள்ளது.

மின்னல் தாக்கியதில் தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்றொரு பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த ஊத்துக்காடு கிராமத்தை சேர்ந்த சவுநந்தரராஜன் மகள் ரஞ்சனா (17) என்பவரும் காயம் அடைந்து மங்கி விழுந்தார். அவரை அங்கு இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு வாலாஜாபாத் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று முதல் உதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இதுகுறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்