< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
குரோம்பேட்டை அருகே மின்சார ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி
|14 Aug 2023 3:09 PM IST
குரோம்பேட்டை அருகே மின்சார ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலியானார்.
சென்னையை அடுத்த குரோம்பேட்டை ெரயில் நிலையம் அருகே செல்போனில் பேசியபடியே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற மேற்கு வங்காளத்தை சேர்ந்த லல்லு (வயது 23) என்பவர் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.இதேபோல் தாம்பரம் அடுத்த இரும்புலியூர் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற ஆண் ஒருவர், தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மின்சார ரெயில் மோதி பலியானார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இந்த 2 சம்பவங்கள் குறித்தும் தாம்பரம் ெரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.