செங்கல்பட்டு
கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை
|கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
சென்னை தாம்பரத்தில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு நாகர்கோவில் நோக்கி சென்ற அந்தியோதயா விரைவு ரெயில் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு வாலிபர் திடீரென ரெயில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த தாம்பரம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
காதலி பேசாததால்
இது குறித்து தாம்பரம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரவன் வழக்குப்பதிவு செய்து யார்? என்பது குறித்து விசாரித்து வந்தார்.
போலீஸ் விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட வாலிபர் கூடுவாஞ்சேரி முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவி என்பவரது மகன் பரணி (வயது 19) என்பது தெரிய வந்தது. இவர் சமீபத்தில் போதை மறுவாழ்வு இல்லத்தில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்ததாகவும், அவர் காதலித்து வந்த பெண் அவரிடம் பேசாததால் மனமுடைந்த பரணி ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.