ஈரோடு
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
|தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டாா்.
பவானி
பவானியை அடுத்த குருப்பநாயக்கன்பாளையம் கணேசன் மளிகை கடை வீதியை சேர்ந்தவர் மோகன். இவருடைய மனைவி லோகேஸ்வரி. இவருடைய தம்பி சரவணன் (வயது 27). இவர் ஈரோட்டில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். தாய், தந்தை இல்லாததால் லோகேஸ்வரியின் பராமரிப்பில் சரவணன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக லோேகஸ்வரி வசித்த அதே பகுதியில் தனி வீட்டில் சரவணன் வசித்து வந்து உள்ளார். மேலும் சரவணனுக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் அவர் மனவருத்தத்தில் இருந்து வந்து உள்ளார். அதுமட்டுமின்றி தான் ராசி இல்லாதவன். தன்னை திருமணம் செய்ய யாரும் முன்வரமாட்டார்கள் என விரக்தியோடு பேசி வந்தாகவும் தெரிகிறது.
இதன்காரணமாக அவர் மனமுடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பாிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.