< Back
மாநில செய்திகள்
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தினத்தந்தி
|
18 Oct 2023 12:15 AM IST

செம்பனார்கோவில் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

திருக்கடையூர்:

செம்பனார் கோவில் அருகே கீழ் மாத்தூர் நடுத்தெருவை சேர்ந்த இளங்கோவன் மகன் மணிமாறன் (வயது 28). இவரின் தந்தை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். இந்த நிலையில் தனது சித்தப்பா முரளிதரனின் வீட்டில் மணிமாறன் வளர்ந்து வந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஓசூருக்கு வேலைக்கு செல்வதாக கூறி மணிமாறன் சென்றதாகவும், அதன்பிறகு வீட்டில் உள்ளவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் செம்பனார்கோவில் அருகே மஞ்சள் ஆற்றங்கரையில் உள்ள புங்கை மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் மணிமாறன் நேற்று காணப்பட்டுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த செம்பனார்கோவில் போலீசார் மணிமாறனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சித்தப்பா முரளிதரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்