< Back
மாநில செய்திகள்
தந்தை இறந்த சோகத்தில் வாலிபர் தற்கொலை
அரியலூர்
மாநில செய்திகள்

தந்தை இறந்த சோகத்தில் வாலிபர் தற்கொலை

தினத்தந்தி
|
11 Feb 2023 12:45 AM IST

தந்தை இறந்த சோகத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜதுரை மகன் திருமூர்த்தி (வயது 27). இவர் சிறுவயதாக இருந்தபோதே இவரது தாய் இறந்து விட்டதால் அவரது தந்தை ராஜதுரை 2-வது திருமணம் செய்து கொண்டார். திருமூர்த்தியும் அந்த குடும்பத்திலேயே வளர்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமூர்த்தியின் தந்தை ராஜதுரை உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட துக்கத்தில் திருமூர்த்தி கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சம்பவத்தன்று வயலில் பயன்படுத்தும் களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டதாக திருமூர்த்தி அவரது சின்னம்மா அபிராமிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதை அடுத்து உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் திருமூர்த்தி சிகிச்சை பலன்இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அபிராமி தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நிக்கோலஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்