மனைவியுடன் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு வாலிபர் தற்கொலை
|மனைவியோடு பிறந்தநாள் கொண்டாடிவிட்டு வந்த வாலிபர், கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டார்.
கன்னியாகுமரி,
நாகர்கோவிலை அடுத்த குளச்சல் அருகே உடையார்விளையை சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மகன் தினேஷ் பாபு (வயது31). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தொழிலாளர்களை வைத்து தையல் ஆரி ஒர்க் வேலை செய்து வந்தார்.
கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த சாந்தி(29) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை.
கடந்த சில நாட்களாக தினேஷ் பாபுவுக்கு தொழிலில் நஷ்டம் காரணமாக ரூ.10 லட்சம் வரை கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். தினேஷ்பாபுவின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் தினேஷ்பாபுவிற்கு நேற்றுமுன்தினம் 31-வது பிறந்த நாளாகும். இதையடுத்து அன்று மதியம் அவர், மனைவியின் வீட்டிற்கு சென்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
பிறந்த நாளின்போது மனைவிக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தார். மாலையில் உடையார்விளைக்கு திரும்பினார். பின்னர் ஏற்கனவே கடன் தொல்லையால் மனமுடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீஸ் விசாரணையில், கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்து வந்த தினேஷ்பாபுவிற்கு நேற்றுமுன்தினம் 31-வது பிறந்த நாளாகும். இதையடுத்து அன்று மதியம் அவர், மனைவியின் வீட்டிற்கு சென்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாளின்போது மனைவிக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தார். மாலையில் உடையார்விளைக்கு திரும்பி வந்து தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.