மயிலாடுதுறை
பள்ளி நேரத்தில் மாணவர்களை குளிர்பானம் வாங்க அனுப்பிய ஆசிரியர்
|பள்ளி நேரத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களை குளிர்பானம் வாங்க அனுப்பினார்.
சீர்காழி:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவர்கள் 4 பேரை கடைக்கு சென்று குளிர்பானம் வாங்கி வருமாறு அனுப்பி உள்ளார். இதனை தொடர்ந்து 4 பேரும் கடைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, பள்ளி நேரத்தில் மாணவர்கள் வெளியே நிற்பதை கண்டார். அவர் காரை நிறுத்தி மாணவர்களை அழைத்து பள்ளி நேரத்தில் எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள் என விசாரித்தார். அதற்கு மாணவர்கள் ஆசிரியர் குளிர்பானம் வாங்க அனுப்பியதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்களை குளிர்பானம் வாங்க அனுப்பிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.