< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
திருமங்கலம் அருகே விபத்தில் டீக்கடைக்காரர் சாவு
|5 Dec 2022 1:21 AM IST
திருமங்கலம் அருகே விபத்தில் டீக்கடைக்காரர் உயிரிழந்தார்
திருமங்கலம்,
நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் சேக்முகமது (வயது 45). மதுரையில் டீக்கடை நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் நெல்லை சென்றுவிட்டு மீண்டும் மதுரைக்கு திரும்பி வந்துள்ளார். விருதுநகர்-மதுரை நான்குவழிச்சாலையில் கள்ளிக்குடி அருகே வந்த போது முன்னால் சென்ற மற்றொரு இருசக்கர வாகனம் திடீரென பிரேக் அடிக்கவே பின்னால் வந்த சேக்முகமது அதில் மோதியுள்ளார். இதில் அவர் தூக்கிவீசப்பட்டு தலையில் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல்சிகிச்சைக்கு மதுரையில் அனுமதிக்கப்பட்ட சேக்முகமது பரிதாபமாக நேற்று உயிரிழந்தார். இது குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.