< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு தேநீர் விருந்து
|23 Sept 2023 12:32 AM IST
சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விநாயகர் சிலைகள் ஊர்வலங்களில் எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் இல்லாமல் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்கி அனைத்து நிலை போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் இரவு, பகல் பாராமல் மிக சிறப்பாக பணியாற்றினர். அவர்களை பாராட்டி கவுரவிக்கும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி அனைத்து போலீஸ் நிலையங்கள் மற்றும் மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் காபி வித் கான்ஸ்டபிள் என்ற தேநீர் விருந்து நடைபெற்றது.