< Back
மாநில செய்திகள்
தரைப்பாலத்தில் தார்ச்சாலை அமைக்க வேண்டும்
திருவாரூர்
மாநில செய்திகள்

தரைப்பாலத்தில் தார்ச்சாலை அமைக்க வேண்டும்

தினத்தந்தி
|
21 Jun 2023 12:15 AM IST

கூத்தாநல்லூர் அருகே தரைப்பாலத்தில தார்ச்சாலை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தரைப்பாலம்

கூத்தாநல்லூரில் இருந்து, வடபாதிமங்கலம் செல்லும் சாலையில் இடையில் உள்ளது நாகங்குடி கிராமம். இந்த கிராமத்தில் ஆபத்தான சாலை வளைவில் தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம் பழுதடைந்ததால் அதை அகற்றி விட்டு புதிய தரைப்பாலம் கட்டப்பட்டது.

புதிதாக கட்டப்பட்ட தரைப்பாலத்தின் மேல்பகுதியில் மணல் கொட்டப்பட்டு வாகனங்கள் சென்று வர அனுமதிக்கப்பட்டது. என்றாலும், மணல் கொட்டப்பட்ட இடம் மேடான பகுதியாகவும், சிறு சிறு பள்ளங்களும் ஏற்பட்டு உள்ளது.

வாகனங்கள் செல்வதில் சிரமம்

இந்த சாலை திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மன்னார்குடி, கும்பகோணம், நாகை, திருத்துறைப்பூண்டி போன்ற நகர பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடம்.

இதனால் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் தினமும் இந்த சாலை வழியாக சென்று வருகின்றன.

நாகங்குடியில் தரைப்பாலத்தில் உள்ள சாலை மேடான மணல் பகுதியாக உள்ளதால் வாகனங்களில் ஏறி இறங்கி செல்வதில் சிரமம் அடைகிறது.

தார்ச்சாலை அமைக்க வேண்டும்

இந்த சாலை மழை காலத்தில் சேறும், சகதியுமாக மாறிவிடும். தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதால் இந்த சாலை மேலும் சேதமடைய வாய்ப்பு உள்ளது.

எனவே, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு தரைப்பாலத்தில் தார்ச்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்