< Back
மாநில செய்திகள்
மாணவியுடன் சேர்ந்து சைக்கிள் ஓட்டிய தமிழரசி எம்.எல்.ஏ.
சிவகங்கை
மாநில செய்திகள்

மாணவியுடன் சேர்ந்து சைக்கிள் ஓட்டிய தமிழரசி எம்.எல்.ஏ.

தினத்தந்தி
|
8 Sept 2023 1:25 AM IST

மாணவியுடன் சேர்ந்து தமிழரசி எம்.எல்.ஏ. சைக்கிள் ஓட்டினார்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரம், கட்டிக்குளம், சின்ன கண்ணனூர் ஆகிய கிராமங்களில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது, இதில் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி கலந்து கொண்டு சைக்கிள்களை மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார்.

ராஜகம்பீரம் பள்ளியில் நடந்த விழாவில், மாணவ-மாணவிகள் எங்களோடு நீங்கள் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்று கேட்டனர். இதைதொடர்ந்து மாணவியுடன் இணைந்து தமிழரசி எம்.எல்.ஏ. சைக்கிள் ஓட்டினார். மாணவிகளுடன் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து பள்ளி வளாகத்தை சுற்றிவந்தார். இதைதொடர்ந்து அவர் மாணவிகளுடன் உரையாடினார்.

விழாவில் யூனியன் தலைவர் லதா அண்ணாதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர் ராமையா, ராஜகம்பீரம் ஊராட்சி மன்ற தலைவர் முஜிப் ரகுமான், சின்ன கண்ணனூர் ஊராட்சி மன்ற தலைவர் அங்குசாமி, கட்டிக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தமிழ்நேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்