< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் ஆடம்பர தேர்பவனி
|17 Aug 2023 1:35 AM IST
பணிக்கன்குப்பம் புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது.
பண்ருட்டி,
பண்ருட்டி அடுத்த பணிக்கன்குப்பத்தில் புனித வின்னேற்பு அன்னை ஆலயம் உள்ளது. இங்கு 123-வது ஆண்டு பெருவிழா கோலகாலமாக நடைபெற்றது. அதன்படி கடந்த 6ந்தேதி பெருவிழா கொடியேற்றப்பட்டு, பணிக்கன்குப்பம் பங்குத்தந்தை ராபர்ட் தலைமையில் திருப்பலி மற்றும் தேர்பவனி நடைபெற்று வந்தது.
விழாவில் நேற்று முன்தினம் இரவு ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதையொட்டி, காலையில் கடலூர் புனித வளனார் கல்லூரி செயலாளர் அருட்திரு சுவாமிநாதன் தலைமையில் கூட்டு திருப்பலி நடைப்பெற்றது. பின்னர் இரவு 10 மணி அளவில் அன்னையின் ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பெருவிழா கொடி இறக்கும் நிகழ்ச்சி நடந்தது.