< Back
மாநில செய்திகள்
தேயிலை தோட்டத்தில் திடீர் பள்ளம்
நீலகிரி
மாநில செய்திகள்

தேயிலை தோட்டத்தில் திடீர் பள்ளம்

தினத்தந்தி
|
16 Sept 2023 4:15 AM IST

பந்தலூர் அருகே தேயிலை தோட்டத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.

பந்தலூர்

பந்தலூர் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சோலாடி, பொன்னானி ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் குடிநீருக்கு ஆதாரமாக உள்ள கிணறுகள் நிரம்பி வருகிறது. பந்தலூர் அருகே அத்திகுன்னா பகுதியில் தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகள் உள்ளன. இந்தநிலையில் நேற்று அந்த குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள தேயிலை தோட்டத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டது.

இதனால் சத்தம் கேட்டு குடியிருப்புகளில் இருந்து தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பள்ளம் ஏற்பட்டதை கண்டு பீதி அடைந்தனர். அங்கு மண்ணில் 20 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டது தெரியவந்தது. தகவல் அறிந்த பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் குரு, கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர். அவர்கள் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினர். திடீர் பள்ளம் ஏற்பட்டது குறித்து புவியியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்