< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
சாலையோரம் ஏற்பட்ட திடீர் பள்ளம்
|26 Aug 2023 12:19 AM IST
சாலையோரம் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தரகம்பட்டி அருகே உள்ள கரிச்சிப்பட்டி குடியிருப்பு பகுதி வழியாக ஒரு லாரி சென்றது. அப்போது சாலைேயாரம் திடீரென 20 அடிக்கு பள்ளம் ஏற்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த கடவூர் தாசில்தார் முனிராஜ், மேலப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம் மற்றும் அதிகாரிகள் அந்த பள்ளத்தை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் 2 யூனிட் மணலை பள்ளத்தில் கொட்டினர். ஆனால் பள்ளம் மூடாமல் உள்பக்கமாகவே சென்றது. இதையடுத்து இந்த பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த ஏதாவது உள்ளதா? என்று ஆய்வு செய்யுமாறு மாவட்ட நிர்வாகம், தொல்லியல் துறை அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு, அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.