< Back
மாநில செய்திகள்
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
மாநில செய்திகள்

திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்

தினத்தந்தி
|
18 Aug 2024 9:42 AM IST

திருச்செந்தூரில் இன்று திடீரென 70 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிவிட்டு முருகனை தரிசனம் செய்கின்றனர். பவுர்ணமியையொட்டி, திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இந்த நிலையில் திருச்செந்தூரில் இன்று திடீரென 70 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. இதனால் கடலில் உள்ள பாறைகள் வெளியே தெரியத் தொடங்கின. அவற்றின் மீது நின்று பக்தர்கள் புகைப்படங்களை எடுத்துச் சென்றனர். அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் திருச்செந்தூரில் கடல் உள்வாங்கிவிட்டு, பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்