< Back
மாநில செய்திகள்
ஆவின் பால் விலை திடீர் உயர்வு..!
மாநில செய்திகள்

ஆவின் பால் விலை திடீர் உயர்வு..!

தினத்தந்தி
|
16 Nov 2023 12:59 PM IST

ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் வரும் ஆவின் பால் இன்று முதல் வயலட் நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் பால் விற்பனையுடன் நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி, பால் பவுடர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றனர். ஆவின் பால் பாக்கெட்டானது பச்சை, ஆரஞ்ச், ஊதா என பல்வேறு நிறங்களில் கொழுப்பு சத்திற்கு ஏற்றார் போல் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் ஆவின் பால் விலை திடீரென உயர்ந்துள்ளது. 200 மி.லி ஆவின் பால் பாக்கெட் விலை ரூ.50 காசுகள் உயர்ந்து இன்று முதல் ரூ.10 என விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் வரும் ஆவின் பால் இன்று முதல் வயலட் (Violet) நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

எனவே ஆவின் முகவர்கள் மேற்கண்ட விலையின் அடிப்படையில் வங்கியில் பணம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மண்டல பொறுப்பாளர்கள் மேற்கண்ட விலையில் பணம் வசூல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்