< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை, எண்ணூர் அருகே உள்ள தொழிற்சாலையில் திடீர் வாயு கசிவு... 30க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
|27 Dec 2023 2:14 AM IST
வாயு கசிவால், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறலுடன் மயக்கம் ஏற்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் திடீரென இரசாயன வாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாயு கசிவால், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறலுடன் மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இரசாயன வாயு கசிவால், அப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நள்ளிரவில் திடீரென இருமல், மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதால், பெரியகுப்பம் மீனவ கிராம பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், தங்களது வீட்டை விட்டு வெளியேறி, ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலம் வேறு இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் பரபரப்புடன் காணப்படுகிறது.