< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
பள்ளிக்கூடம் அருகே திடீர் தீவிபத்து
|14 Sept 2023 12:15 AM IST
உடன்குடியில் பள்ளிக்கூடம் அருகே திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
உடன்குடி:
உடன்குடி பெரியதெருவிலுள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளி மதில் சுவர் அருகே சீமைகருவேல மரங்கள் இருந்தன. இந்த மரங்கள் நேற்று காலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தன. உடனடியாக பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் வகுப்பறைகளில் இருந்த மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக வெளியேற்றினர். அப்பகுதி மக்கள் அருகிலுள்ள குடிநீர் தொட்டியிலிருந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ பரவி எரிந்தது. இதுகுறித்து திருச்செந்தூர் தீயணைப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கிருந்து தீயணைப்பு வாகனத்தில் வீரர்கள் வந்து தீயை அணைத்து, பள்ளிக்கூடத்திற்குள் பரவாமல் தடுத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.