< Back
மாநில செய்திகள்
குன்றத்தூர் அருகே குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

குன்றத்தூர் அருகே குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து

தினத்தந்தி
|
7 March 2023 5:12 PM IST

குன்றத்தூர் அருகே குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

குன்றத்தூரில் இருந்து திருநீர்மலை செல்லும் பிரதான சாலையில் வழுதலம்பேடு பகுதியில் மதுபான கடை அமைந்துள்ளது. இதன் அருகிலேயே திருமுடிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் அதிக அளவில் இங்கு குவித்து வைக்கப்பட்டு இருந்தது. மேலும் இங்கு உரக்கிடங்கும் உள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டு இருந்த இடத்தில் இருந்து கரும்புகை வந்தது. இதனைகண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் தீ கட்டு கடங்காமல் மள,மள வென்று பரவியது.

இதுகுறித்து உடனடியாக தாம்பரம் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் தீ மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால் இரவு நேரத்தில் இங்கு வந்து மதுஅருந்திய நபர்கள் யாராவது புகை பிடித்து விட்டு போட்டதால் எதேச்சையாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் சதி செயலா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் புகை மூட்டமாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்