< Back
மாநில செய்திகள்
சேலம் அருகே பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து- ஒரு பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு.!
மாநில செய்திகள்

சேலம் அருகே பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து- ஒரு பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு.!

தினத்தந்தி
|
1 Jun 2023 6:20 PM IST

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்,

சேலம் அருகே கொல்லப்பட்டி எனும் பகுதியில் சதிஷ் குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோன் உள்ளது. இங்கு 10 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று மாலை பட்டாசு குடோனில் எதிர்பாராதவிதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஒரு பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும், தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 5க்கும் மேற்பட்டோர் ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தால், பட்டாசு குடோன் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்