< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
பள்ளிக்கு சென்ற மாணவிக்கு கத்திக்குத்து
|8 July 2022 2:51 AM IST
பள்ளிக்கு சென்ற மாணவிக்கு கத்திக்குத்து விழுந்தது.
துவரங்குறிச்சி:
மாணவிக்கு கத்திக்குத்து
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி துவரங்குறிச்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை அவர் பள்ளிக்கு சென்றபோது 3 மாணவர்கள், அந்த மாணவியை வழி மறித்துள்ளனர்.
இதையடுத்து மாணவியின் கையில் கத்தியால் குத்திவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைக்கு பின் மாணவி மீண்டும் பள்ளிக்கு திரும்பினார். இது குறித்த புகாரின்பேரில் துவரங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி, மாணவியை கத்தியால் குத்திய மாணவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.