< Back
மாநில செய்திகள்
நீட் பயிற்சி மேற்கொண்டிருந்த மாணவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை - நெய்வேலி அருகே பரபரப்பு
மாநில செய்திகள்

நீட் பயிற்சி மேற்கொண்டிருந்த மாணவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை - நெய்வேலி அருகே பரபரப்பு

தினத்தந்தி
|
5 April 2023 10:00 PM IST

நீட் பயிற்சி மேற்கொண்டிருந்த மாணவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெய்வேலி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெய்வேலி,

நீட் பயிற்சி மேற்கொண்டிருந்த மாணவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெய்வேலி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்எல்சி ஒப்பந்த தொழிலாளர் உத்திராபதியின் மகள் நிஷா என்பவர் தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வருகிறார்.

கடந்தாண்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நீட் தேர்வு பயிற்சி மையம் நடத்திய மாதிரி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இந்த நிலையில் வடலூர் ரெயில் நிலையம் அருகே ரெயில் தண்டவாளத்தில் பெங்களூரில் இருந்து கடலூர் நோக்கி வந்த ரெயில் முன் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்