< Back
மாநில செய்திகள்
சென்னை ஐ.ஐ.டி.யில் ஆந்திராவை சேர்ந்த மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை..!
மாநில செய்திகள்

சென்னை ஐ.ஐ.டி.யில் ஆந்திராவை சேர்ந்த மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை..!

தினத்தந்தி
|
14 March 2023 2:21 PM IST

சென்னை ஐ.ஐ.டி.யில் ஆந்திராவை சேர்ந்த மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சென்னை,

சென்னை ஐஐடியில் 3-ம் ஆண்டு படித்து வந்த ஆந்திராவை சேர்ந்த மாணவர் புஷ்பக் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவர் தற்கொலை சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் உடலை கைப்பற்றி அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே ஐ.ஐ.டி. மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த பாத்திமா தற்கொலை செய்துகொண்டார். அதுபோல கடந்த 2021-ம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி.யில் எரிந்த நிலையில் மாணவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த மாணவரின் பெயர் உன்னிகிருஷ்ணன் நாயர் என்பது தெரியவந்தது. கடந்த மாதம் மராட்டியத்தை சேர்ந்த மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

அதிக மனஅழுத்தம் போன்ற சம்பவங்களால் சென்னை ஐ.ஐ.டி.யில் அதிகமான தற்கொலைகள் அரங்கேறுகின்றன. தொடர்ந்து ஐ.ஐ.டி.யை சேர்ந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது பெற்றோர்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது.

மேலும் செய்திகள்