< Back
மாநில செய்திகள்
ஆட்டுத்தலையை ஈட்டியால் குத்தி வழிபடும் வினோத நிகழ்ச்சி
கரூர்
மாநில செய்திகள்

ஆட்டுத்தலையை ஈட்டியால் குத்தி வழிபடும் வினோத நிகழ்ச்சி

தினத்தந்தி
|
25 July 2022 6:48 PM GMT

ஆட்டுத்தலையை ஈட்டியால் குத்தி வழிபடும் வினோத நிகழ்ச்சி நடந்தது.

கிருஷ்ணராயபுரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கோவில் திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கியது. பின்னர் கரகம் பாலித்தல், தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சரம் குத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி பிச்சம்பட்டி, வளையர்பாளையம் கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் 10, 15 அடி உயரமுள்ள ஈட்டியை எடுத்து கொண்டு ஊர்வலமாக வந்து கோவிலுக்கு முன்பு கூடி நின்றனர்.

பின்னர் கோவில் முன்பு ஆடு ஒன்றை நிறுத்தி அதன் தலையில் பூசாரி மஞ்சள் தண்ணீரை தெளித்தார். தொடர்ந்து ஆட்டின் அனுமதி பிறகு அரிவாளால் ஆடு ெவட்டப்பட்டது. பிறகு வெட்டப்பட்ட ஆட்டின் தலை வானத்தை நோக்கி வீசப்பட்டது. அப்போது ஈட்டியுடன் நின்று கொண்டிருந்த வாலிபர்கள் போட்டி, போட்டு கொண்டு ஆட்டின் தலையை குத்த முயன்றனர். அப்போது ஒருவருக்கொருவர் ஆட்டின் தலையை தட்டி விடும் சம்பவமும் நடந்தது. கடைசியில் வளையர்பாளையத்தை சேர்ந்த குமார் என்பவர் ஈட்டியால் ஆட்டின் தலையை குத்தி கொண்டு கோவிலை 3 முறை வலம் வந்தார். இதையடுத்து அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு மாலை மரியாதை செய்து தாரை தப்படை முழங்க ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த வினோத நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்