< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கொத்தனார், சித்தாள், கடன் கொடுத்த வங்கி பெயருடன் அச்சடிக்கப்பட்ட வித்தியாசமான அழைப்பிதழ் - இணையத்தில் வைரல்..!
|16 Nov 2022 9:29 PM IST
சென்னை அரக்கோணம் அருகே வித்தியாசமான பாணியில் அச்சடிக்கப்பட்ட புதுமனை புகுவிழா அழைப்பிதழ் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
சென்னை,
சென்னை அரக்கோணம் அருகே வித்தியாசமான பாணியில் அச்சடிக்கப்பட்ட புதுமனை புகுவிழா அழைப்பிதழ் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
பொதுவாக பத்திரிகைகளில் அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் பெயர்களைப் போடுவது தான் வழக்கம். ஆனால் அரக்கோணத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சிறைத் துறை அதிகாரி காமராஜன் என்பவர் சற்றே வித்தியாசமான முறையில் புதுமனை புகுவிழா அழைப்பிதழை அச்சடித்துள்ளார்.
"பால் காய்ச்சப் போறோம்" என்ற தலைப்பில், வியர்வை சிந்தி உழைத்த கொத்தனார், சித்தாள் உள்ளிட்ட அனைத்து கட்டுமான தொழிலாளர்கள் முதல் நிதி உதவி வழங்கிய வங்கியின் பெயர் வரை அழைப்பிதழில் அச்சடித்துள்ளார்.
வித்தியாசமான இந்த பத்திரிக்கை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.