< Back
மாநில செய்திகள்
வங்கக்கடலில் உருவாகிறது புயல்... வானிலை ஆய்வு மையம் சொன்ன தகவல்
மாநில செய்திகள்

வங்கக்கடலில் உருவாகிறது புயல்... வானிலை ஆய்வு மையம் சொன்ன தகவல்

தினத்தந்தி
|
5 Dec 2022 9:58 AM IST

வரும் 8ஆம் தேதி தமிழகம் புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதியை புயல் நெருங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மேலும், இந்த புயலானது வரும் 8ஆம் தேதி தமிழகம் புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதியை நோக்கி நெருங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்