< Back
மாநில செய்திகள்
கொடைக்கானல் அருகே வனப்பகுதியில் நிலத்தில் பிளவு
மாநில செய்திகள்

கொடைக்கானல் அருகே வனப்பகுதியில் நிலத்தில் பிளவு

தினத்தந்தி
|
22 Sept 2024 9:54 PM IST

நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பு தொடர்பாக அதிகாரிகள் நாளை ஆய்வு செய்ய உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல்,

கொடைக்கானல் அருகே மேல்மலையில் உள்ள கீழ் கிளாவரை கிராமத்திற்கு கடந்த சில நாட்களாக செருப்பன் ஓடையில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் வராமல் இருந்துள்ளது. இதையடுத்து கிராம மக்கள் சிலர் வனப்பகுதிக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது அருகே கூனிப்பட்டி என்ற வனப்பகுதியில் சுமார் 300 அடி நீளத்திற்கு நிலம் பிளவுபட்டு இருந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், வனப்பகுதியில் நிலம் பிளவுபட்டு இருப்பது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனப்பகுதியில் நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பு தொடர்பாக அதிகாரிகள் நாளை ஆய்வு செய்ய உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனைமலை புலிகள் காப்பக வந்தரேவு வனச்சரகர், புவியியல் தொழில்நுட்ப உதவி இயக்குநர், தீயணைப்புத் துறை, வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.

மேலும் செய்திகள்