< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
வேகத்தடை அமைக்க வேண்டும்வாகன ஓட்டிகள் கோரிக்கை
|27 Oct 2023 12:45 AM IST
வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:-
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் அருணாசலேஸ்வரர் கோவில் எதிரே மன்னார்குடி, சேந்தங்குடி, உச்சுவாடி, வடபாதிமங்கலம் பஸ் நிலையம் ஆகிய இடங்களுக்கு செல்வதற்கான சாலை என 4 பிரிவு சாலைகளாக அமைந்துள்ளன. இதில் மன்னார்குடி மற்றும் சேந்தங்குடி செல்லக்கூடிய சாலையில் வாகன போக்குவரத்து அதிகம். இந்த 4 பிரிவு சாலையின் முகப்பில் ஆபத்தான வளைவுகள் உள்ளன. இதனால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. எனவே வடபாதிமங்கலத்தில் உள்ள 4 பிரிவு சாலை முகப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.