< Back
மாநில செய்திகள்
உடையார்பாளையத்தில் நாளை மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்
அரியலூர்
மாநில செய்திகள்

உடையார்பாளையத்தில் நாளை மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்

தினத்தந்தி
|
30 Jan 2023 12:00 AM IST

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம் உடையார்பாளையத்தில் நாளை நடக்கிறது.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட உடையார்பாளையம், ஆண்டிமடம், செந்துறை ஆகிய வட்டாரங்களுக்குட்பட்ட அனைத்து பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில் இந்த மாதத்திற்கான மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. தலைமையில் நடைபெறுகிறது. கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்