< Back
மாநில செய்திகள்
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பாக சிறப்பு முகாம் - 26,27-ந்தேதி நடக்கிறது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பாக சிறப்பு முகாம் - 26,27-ந்தேதி நடக்கிறது

தினத்தந்தி
|
23 Nov 2022 2:02 PM IST

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றம் முகவரி மாற்றம் போன்றவற்றிக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் 01-01-2023 தேதியன்று 18 வயது பூர்த்தி அடையும் ஒவ்வொருவரும் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6-ம், பெயர் நீக்கம் செய்ய விரும்புபவர்கள் படிவம் 7-ம், வாக்காளர் பட்டியலில் உள்ள எழுத்துப்பிழைகள் முகவரி மாற்றம் தொகுதி மாற்றம் முதலியவற்றுக்கு படிவம் 8-ம், தங்களது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள நியமிக்கப்பட்டுள்ள இடங்களான வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிகளில் வருகின்ற டிசம்பர் மாதம் 8-ந் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் படிவங்கள் அளிக்கலாம். மேலும் 1.1.2023 அன்று 18 வயது பூர்த்தியாகும் மாணவர்கள் தங்கள் பயிலும் கல்வி நிறுவனங்களில் படிவம் 6-யை அளித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்.

அதன் தொடர்பாக வருகின்ற 26 மற்றும் 27-ந் தேதி ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே மேற்படி முகாமில் பொதுமக்கள் நேரில் சென்று படிவங்களை பெற்று பூர்த்தி செய்து பிறந்த தேதி மற்றும் குடியிருப்புக்கான ஆதார ஆவணங்களை நகல்களுடன் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்