சென்னை
கொளத்தூரில் தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்
|கொளத்தூரில் தந்தையை அரிவாளால் வெட்டிய மகனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கொளத்தூர் யுனைடெட் காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் பழனி(வயது 70). இவருடைய மகன் பத்மநாபன்(50). ஆட்டோ டிரைவர். இவர்கள் அனைவரும் கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.
தந்தை-மகன் இடையே கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மதியம் வீட்டுக்கு வந்த பத்மநாபன், தனது தந்தை பழனியுடன் தகராறு செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த பத்மநாபன், தந்தை பழனியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
இதில் தலை, கழுத்து, முதுகு ஆகிய பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பழனியை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கொளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் பத்மநாபனை கைது செய்து விசாரித்து வருகிறார்.