< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
வீட்டின் கழிவறைக்குள் புகுந்த பாம்பு
|10 Sept 2023 3:00 AM IST
எரியோடு அருகே வீட்டின் கழிவறைக்குள் புகுந்த பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்.
எரியோடு அருகே உள்ள குதுப்பனம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 70). இவரது வீட்டின் கழிவறைக்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டது. இதனை கண்ட சுப்பிரமணி மற்றும் அவரது குடும்பத்தினர் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் 30 நிமிடம் போராடி, அங்கு மறைந்திருந்த 6 அடி நீளமுள்ள பாம்பை உயிருடன் பிடித்தனர். இதனையடுத்து அந்த பாம்பு, வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.