< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
ஆசிரியர் வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு
|20 Oct 2023 5:00 AM IST
நத்தத்தில் ஆசிரியர் வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.
நத்தம் அண்ணாநகரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 36). இவர், தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இவரது வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதனைக்கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து நத்தம் தீயணைப்பு நிலையத்துக்கு அவர் தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள், லட்சுமணன் வீட்டுக்கு விரைந்தனர். பின்னர் அங்கு பதுங்கி இருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். பிடிபட்டது 4 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஆகும். அந்த பாம்பு, நத்தம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.