< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
சோப்பு ஆயில் கம்பெனிக்குள் புகுந்த பாம்பு
|22 Sept 2023 4:00 AM IST
போடி அருகே சோப்பு ஆயில் கம்பெனிக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.
போடி அருகே உள்ள வினோபாஜி காலனியில் சோப்பு ஆயில் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் பாம்பு ஒன்று புகுந்தது. இதைக்கண்ட கம்பெனியின் உரிமையாளர் விசுவாசம் பதறியடித்து ஓடினார். பின்னர் அவர் போடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சுமார் 1 மணி நேரம் போராடி அங்கு பதுங்கியிருந்த பாம்பை பிடித்தனர். பிடிபட்டது சுமார் 7 அடி நீள கருநாக பாம்பு ஆகும். பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.