< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிளில் புகுந்த பாம்பு
தென்காசி
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிளில் புகுந்த பாம்பு

தினத்தந்தி
|
29 Nov 2022 12:15 AM IST

கடையத்தில் மோட்டார் சைக்கிளில் பாம்பு புகுந்தது.

கடையம்:

கடையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டியப்பன். இவர் நேற்று கடையம் பஸ் நிலையத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார். அப்போது, அவரது மோட்டார் சைக்கிளில் பாம்பு ஒன்று புகுந்தது.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கடையம் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். வேட்டை தடுப்பு காவலர் வேல்ராஜ் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மோட்டார் சைக்கிளை அருகில் உள்ள ஒர்க் ஷாப்புக்கு கொண்டு சென்று கழட்டி, 3 அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பை பிடித்தனர்.

மேலும் செய்திகள்