புதுக்கோட்டை
குளிர்பான விற்பனை கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு
|குளிர்பான விற்பனை கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆலங்குடி கீழரத வீதியை சேர்ந்தவர் ரமேஷ் மகன் பிரசாந்த் (வயது 22). இவர் மதுரையில் குளிர்பான விற்பனை கடை வைத்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். அப்போது, பாத்தம்பட்டி சாலை அருகில் பிரசாந்த் மற்றும் நண்பர்கள் 6 பேருடன் மது குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதேபோல் கடந்த 23-ந் தேதி பிரசாந்த் பாத்தம்பட்டி சாலையில் உள்ள டாஸ்மாக்கடையில் மது வாங்கிக்கொண்டு வெளியே வந்தார். அப்போது பள்ளத்திவிடுதியை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் பிரசாந்த்தை வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பிரசாந்த் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில், ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தப்பியோடியவர்களை வலைவீசி தேடி வருகிறார்.