< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மீன் பிரியர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி..!
|29 May 2022 3:54 PM IST
தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் நிலவி வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் நிலவி வருவதால், சிறிய வகை பைபர் படகுகள் மட்டுமே கடலில் மீன் பிடிக்க செல்கின்றன. இதன் காரனமாக மீன்களின் விலை அதிகரித்து கானப்படுகிறது. இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று காசிமேட்டில் மீன் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
இன்றைய நிலவரப்படி, வஞ்சிரம் மீன் கிலோ1200 ரூபாய்க்கும், பர்லா மீன் கிலோ 350 ரூபாய்க்கும், பாறை மீன் கிலோ 350 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே போல் சங்கரா மீன் கிலோ 500 முதல் 1000 ரூபாய்க்கும், கொடுவா மீன் கிலோ 350 முதல் 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆற்று மீன்களான கெண்டை மீன் மற்றும் ஜிலேபி மீன்கள் கிலோ தலா 100 ரூபாய்க்கும், எறா மீன் கிலோ 150 முதல் 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.