< Back
மாநில செய்திகள்
காதலியை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்த காதலன் - விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்
மாநில செய்திகள்

காதலியை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்த காதலன் - விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்

தினத்தந்தி
|
12 Jan 2024 10:21 AM IST

காதலனின் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட இளம்பெண் செஞ்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

செஞ்சி,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது இளம் பெண். இவருக்கு பெரும்புகை கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் வெங்கடேசன்(வயது 30) என்பவர் அறிமுகமானார். இதன் பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காதலியை வெங்கடேசன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும், வாட்ஸ் அப்பில் வீடியோ காலில் பேசிய வெங்கடேசன், தனது காதலியிடம் ஆடைகள் அனைத்தையும் களைய வைத்து பேசி இருக்கிறார். இதில் அவர் நிர்வாணமாக இருப்பதை தனது செல்போனில், காதலிக்கே தெரியாமல் பதிவு செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோவை காதலியிடம் காண்பித்து, தனக்கு தேவைப்படும் போதெல்லாம் மிரட்டி, அவரை வீட்டுக்கு கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதையும் வீடியோ எடுத்து வைத்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. வெங்கடேசனின் இந்த நடவடிக்கைகளுக்கு அவரது அண்ணன் புருஷோத்தமன் (32), உறவினர் பூபாலன் (40), பூபாலன் மனைவி புஷ்பா (35) ஆகியோர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

வெங்கடேசனின் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட இளம்பெண் செஞ்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி வழக்கு பதிவு செய்து வெங்கடேசன், அவருக்கு உறுதுணையாக இருந்த புருஷோத்தமன் ஆகியோரை கைது செய்தார். மேலும் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து செஞ்சி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்