< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்பி கொண்டிருந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...
|16 Aug 2022 5:51 PM IST
திண்டிவனம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலம் பழுதடைந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திண்டிவனம்,
திண்டிவனம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலம் பழுதடைந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஓங்கூர் ஆற்றின் குறுக்கே உள்ள சிறு பாலம் பழுதடைந்ததால், சீரமைப்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
தொடர்விடுமுறை முடிந்து பொதுமக்கள் சென்னை உள்ளிட்ட பணியிடங்களுக்கு திரும்பிக்கொண்டிருப்பதால், அந்த வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், அவ்வழியாக பயணம் செய்த பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
இதையடுத்து, சாலை தடுப்பை அகற்றி, போலீசார் மாற்று வழியை ஏற்படுத்தி கொடுத்தனர். இதற்கிடையே, அந்த பகுதியை, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் ஆய்வு செய்தார்.