< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
டீ கடை என நினைத்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி - உள்ளே ஒரு பெண்... அதிர்ச்சி வீடியோ
|26 Aug 2022 3:30 PM IST
பாலக்கோடு அருகே சட்டவிரோதமாக மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள நாள்ரோடு பகுதியில் டீ கடை போல் அமைந்து மது பானம் விற்பனை செய்யப்படுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில், மதுபானம் வாங்க வருபவர்களிடம் பணத்தை பெற்று கொண்டு பெண் ஒருவர் மதுபானத்தை பாட்டிலில் ஊத்தி கொடுக்கிறார்.
பின்னர், இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக மது விற்ற மீனா என்ற பெண்ணையும், மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் பாலக்கோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.