< Back
மாநில செய்திகள்
சாதி, மத பிரச்சனைகளை தடுக்க தனி உளவுப்பிரிவு தொடங்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
மாநில செய்திகள்

சாதி, மத பிரச்சனைகளை தடுக்க தனி உளவுப்பிரிவு தொடங்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
15 Aug 2023 10:49 PM IST

நாங்குநேரியில் சக மாணவர்களால் தாக்கப்பட்ட மாணவனை விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. நேரில் சந்தித்தார்.

நாங்குநேரி,

நாங்குநேரியில் பள்ளி மாணவர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 12ம் வகுப்பு மாணவனை விசிக தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : "மாணவன் உடலில் 21 இடங்களில் வெட்டு காயங்கள் இருக்கின்றன.மேலும் சில நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்க வேண்டும். இருவரும் விரைவில் வீடு திரும்புவார்கள். பள்ளி மாணவர்களிடம் நச்சுகளை பரப்புவது புதிதல்ல.

இந்த குடும்பத்தை முதல் அமைச்சர் பாதுகாக்க வேண்டும். அரசின் சார்பில் வீடு ஒன்றை வழங்க வேண்டும். நாங்குநேரியை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கனவே எழுந்துள்ளது. சாதியின் பெயரால் நெல்லை, தூத்துக்குடி வட்டாரத்தில் இந்த கொடுமை தொடர்ந்து வருகிறது. சாதி, மத பிரச்னைகளைத் தடுக்க தனி உளவுப்பிரிவு துவங்க வேண்டும்" என திருமாவளவன் கூறினார்.

மேலும் செய்திகள்