< Back
மாநில செய்திகள்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பணியாற்றி வந்த காவலர் தூக்கிட்டு தற்கொலை
மாநில செய்திகள்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பணியாற்றி வந்த காவலர் தூக்கிட்டு தற்கொலை

தினத்தந்தி
|
19 Aug 2023 1:10 PM IST

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பணியாற்றி வந்த காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராமேஸ்வரம்,

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் பணியாற்றி வந்த காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பணிச்சுமை காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம்சாட்டி, சக பணியாளர்கள் கோவில் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் அங்கு பணியாற்றி வந்த காவலர் நவீன் குமார் என்ற சந்தோஷ் நேற்று இரவு அவர் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது இறப்பிற்கு பணிச்சுமையே காரணம் என்றும் இது தொடர்பாக காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சக பணியாளர்கள் கிழக்கு வாசல் கோபுரத்திற்கு முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்