திருவள்ளூர்
சுங்கச்சாவடியில் வேகமாக வந்த லாரியை தடுத்து நிறுத்த முயன்ற காவலாளி பலி
|சுங்கச்சாவடியில் வேகமாக வந்த லாரியை தடுத்து நிறுத்த முயன்ற காவலாளி பலியானார். லாரி டிரைவர் கைதானார்.
காவலாளி பலி
சென்னை அடுத்த மணலி ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (வயது 65). இவர் மாதவரம் அடுத்த மஞ்சம்பாக்கத்தில் உள்ள சுங்கச்சாவடியில் காவலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தபோது, மணலியில் இருந்து மாதவரம் நோக்கி வேகமாக வந்த கன்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்த முயன்றார். அப்போது வேகமாக வந்த லாரி ஜெயப்பிரகாஷ் மீது மோதியது. இதில் ஜெயப்பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தார்.
டிரைவர் கைது
விபத்தை ஏற்படுத்தி விட்டு டிரைவர் லாரியை நிறுத்தாமல் அங்கிருந்து சென்று விட்டார். இதைக்கண்ட போலீசார் விரைந்து சென்று மாதவரம் ரவுண்டானா அருகே அருகே லாரியை மடக்கி பிடித்தனர்.
இது குறித்து மாதவரம் செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சுபாஷினி வழக்கு பதிவு செய்து விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் பிரபு (31) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுங்கச்சாவடியில் காவலாளி மீது லாரி மோதிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.