< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
பள்ளத்தில் விழுந்து தீப்பிடித்து எரிந்த ஸ்கூட்டர்
|26 Sept 2023 7:29 PM IST
ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.
எர்ணாவூர் மாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுகுமார் (வயது 70). தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அதே பகுதியில் உள்ள முல்லை நகரில் உள்ள பள்ளத்தில் ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விழுந்தது. திடீரென ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்தது. அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். எனினும் ஸ்கூட்டர் முழுமையாக தீயில் எரிந்து நாசமானது. சுகுமார் காயமின்றி உயிர் தப்பினார். இதுபற்றி எண்ணூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.