< Back
மாநில செய்திகள்
பேருந்து படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்த பள்ளி மாணவன்
மாநில செய்திகள்

பேருந்து படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்த பள்ளி மாணவன்

தினத்தந்தி
|
15 Oct 2022 1:54 AM IST

கடலூரில் தனியார் பள்ளியில் பயிலும் பள்ளி மாணவன் பேருந்தில் பயணித்த போது, திடீரென கீழே விழுந்துள்ளார்.

கடலூர்,

கடலூர் மாவட்டம், புவனகிரியில் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவன் தவறி கீழே விழுந்தார். தலைக்குளம் கிராமத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் அதிக கூட்ட நெரிசல் காரணமாக பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர்.

அப்படி சிதம்பரம் தனியார் பள்ளியில் பயிலும் பள்ளி மாணவன் பேருந்தில் பயணித்த போது, திடீரென கீழே விழுந்துள்ளார். அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் அலறி அடித்து கத்தவே ஓட்டுனர் பேருந்து நிறுத்தினார். பேருந்து ஓட்டுனர் துரிதமாக செயல்பட்டதால் மாணவன் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.

மேலும் செய்திகள்